வங்கி கிளைகள் திறக்க அனுமதி !
Permission to open bank branches
இலங்கையில் இன்றிலிருந்து (21-08-2021) அடுத்தவாரம் (30-08-2021) வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட கடமைகள் முடங்கிக்கிடக்கின்றன.
இந்த நிலையில் நிதி நிலைமையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக இலங்கையில் வங்கிகளின் சில கிளைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு அனுமதி வழங்குவதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிதி பரிவர்த்தனைகளை முடிந்தவரை Online Banking, SMS Banking, Mobile Banking வசதிகளை கொண்டு மேட்கொள்ளும்படி இலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
