மெஸ்ஸிக்கு ரொனால்டோ விடுத்த சவால் என்ன தெரியுமா ?
ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடாமல் இத்தாலிக்கும் வாருங்கள் என உதைபந்தாட்ட நட்சத்திர வீரரான ரொனால்டோ அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு சவால் விடுத்துள்ளார்.
கால்பந்தாட்ட விளையாட்டில் ஜாம்பவான்களாக விளங்கி வருகின்றனர் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ. அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காகவும் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ இத்தாலியின் யுவான்டஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக ரொனால்டோ கூறுகையில், ' ஒருநாள் மெஸ்ஸி இத்தாலிக்கு வருவதை நான் கண்டிப்பாக விரும்புகின்றேன். என்னுடைய சவாலை அவர் ஏற்பார் என நம்புகின்றேன். ஆனால் லிஸ்பனில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதற்கு நான் மதிப்பளிக்கிறேன்.
அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனா அணிக்காக மட்டுமே விளையாடினால் நான் அவரை இழக்க வில்லை மாறாக அவர் தான் என்னை இழக்கின்றார். அவர் ஸ்பெயினில் இருக்கின்றார் ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால் எனது வாழ்க்கை சவாலாக இருக்கும்.
நான் ரசிகர்களை மகிழ்ச்சியாக மாற்ற விரும்புகின்றேன். மெஸ்ஸி ஒரு சிறந்த வீரர். நான் என்னுடைய வசதியான இடத்தை விட்டு இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன் இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது நான் இன்னும் பிரமிக்கத்தக்க வீரர் தான் என்பதை நிரூபித்து கொண்டிருக்கின்றேன்' என தெரிவித்தார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
