பேருவளையில் ஹெரோயின்; வெளியானது அதிர்ச்சிகர தகவல்
கடந்த தினம் பேருவளை பலபிட்டு கடல் எல்லையில் வைத்து குறிப்பிட்ட தொகை ஹீரோயின்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. இது பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் தங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை ஊடாக குறிப்பிட்ட நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட குறிப்பிட்ட தொகையில் ஒரு பகுதி வேறு சில நாடுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட 231 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் இலங்கை பெறுமதி 2,778 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இந்த ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பிரிவால் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
