சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு நடந்த பரிதாப சம்பவம் நடந்தது என்ன?
சென்னைக்கு சுற்றுலா வந்த ஸ்விட்சர்லாந்து பெண்ணிடம் ரூ. 11 இலட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் அடங்கிய பணப்பையை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற பரிதாப சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்சலின் கரோல் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
கரோல் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு 21ஆம் திகதி மாலை தி.நகர் பாண்டி பஜாரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் கரோல் ஆட்டோவில் ஓரமாக உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தபடியே சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை நெருங்கி வந்த இருவர் அவரது கையிலிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.
குறித்த பணப்பையில் 3500 அமெரிக்க டொலர், 13000 swiss franc, ரூபா 5000 இந்திய பணம் என சுமார் 11 லட்சம் மதிப்பிலான கரன்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கரோல் புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை செய்து வருகின்றனர்.
இது போன்ற பல சம்பவங்கள் அப்பகுதியில் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி
BIG BIT TECH TAMIL
தமிழால் இணைவோம்.