11.11 விற்பனை ; அலிபாபா நிறுவனம் சம்பாதித்த கோடிகள் எத்தனை தெரியுமா ?









சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் 20,000 கோடி ரூபாயினை சம்பாதித்துள்ளது.


சீன நாட்டிலும் சரி உலகளாவிய ரீதியிலும் சரி முதலாம் இடத்தை வகிக்கின்ற அலிபாபா நிறுவனம் ஜாக் மாவின் தலைமையில் இயங்கி வருகின்றது.


 அலிபாபா நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா ஒவ்வொரு வருடமும் 11 மாதம் 11ஆம் திகதி தள்ளுபடிகளை கொண்ட விற்பனை தினமாக அறிவிப்பார்.



அவ்வாறு நேற்றைய தினம் இடம்பெற்ற விற்பனையில் விற்பனை ஆரம்பமாகி முதல் ஐந்து நிமிடங்களில் 20 ஆயிரம் கோடி வரை வருமானம் ஈட்டி உள்ளார்.


அசுர வேகத்தில் இடம்பெற்ற இந்த விற்பனையில் சீன நாட்டைச் சேர்ந்த அதிகமான மக்கள் பல கொள்வனவு களை மேற்கொண்டு குவித்துள்ளனர்.


மேலும் ஒரு மணி நேர விற்பனையில் 70,000 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளது.



கடந்த வருடம் இதே தினத்தில் அலிபாபா நிறுவனம் 1.8 லட்சம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டி இருந்தது. இந்த வருடம் அந்த சாதனையை உடைப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.


இந்த விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் அதிக அளவான பொருட்களை விற்றுள்ளன.




நன்றி 
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url