அண்ணன் தம்பி சண்டையின் விளைவாக அரண்மனையில் இருந்து வெளியேறும் ஹரி மெர்க்கல் தம்பதி.
இளவரசர் வில்லியம் உடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஹரி மெர்கல் தம்பதியினர் விரைவில் அரண்மனையை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்பிணி மேகன்(37) தன்னுடைய கணவர் ஹரி(34) உடன் கென்சிங்டன் அரண்மனையிலிருந்து வெளியேறி தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஃபிரோமோர் ஹவுஸிக்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஃபிரோமோர் ஹவுஸில் பத்து அறைகள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான நபருக்கு அருகில் இருக்க விரும்புகிறார்களாம்.
ஏப்ரலில் பிறக்க உள்ள தங்களின் குழந்தைக்காக அடுத்த வருடத்திற்குள் முழுவதுமாக அரண்மனையை விட்டு வெளியேறி விடுவார்கள் என கூறப்படுகிறது.
இதற்கான காரணம் வில்லியம் கொடுத்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே. ஹரி தன்னுடைய மனைவியுடன் அரண்மனையில் இருந்து வெளியேறுவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹரி தங்களுடைய அறை வில்லியம் கேட் அறைக்கு அடுத்து இருப்பதை விரும்புவதில்லை எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக ஃபிரோமோர் ஹவுஸில் தான் ஹரி மெர்க்கல் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய சொந்தப் பணத்தை பயன்படுத்தியே ஹரி அதனை வாங்க விரும்பினார். ஆனால் ராணி பல பவுண்டுகளை கொடுத்து அதனை வாங்கிக் கொடுத்தார்.
புகைப்படங்கள் :
நன்றி
தமிழால் இணைவோம்.
Big Bit News


