இக்கட்டான கட்டத்தில் களத்தில் சந்திரிக்கா !!!
2015 ஜனவரி 8 யில் மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் துரோகம் செய்துள்ளதாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் விசுவாசமானவர்களை கொண்டு கட்சியினை மீளக்கட்டியெழுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகின்ற போது பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டு வருவதற்கான யுத்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்வதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை அழிப்பதற்கு சிலர் முன்வந்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் விலக மாட்டேன்.
கட்சிக்கு விசுவாசமானவர்கள் உடன் ஒன்றிணைந்து கட்சியினை மீளக் கட்டியெழுப்புவதற்கு நான் முன்நின்று பாடுபடுவேன்" என்று கூறினார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
