இந்தோனேசிய விமானத்தின் பிளாக் பாக்ஸ் ஜாவா கடலில் கண்டுபிடிப்பு விபத்துக்கு காரணம் என்ன?
இந்தோனேசியாவைச் சேர்ந்த லயன் ஏர்லைன்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜேடி 610 விமானம்தான் கடலில் விழுந்தது. இவ் விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 29ஆம் திகதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து சுமாத்திரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி இந்த விமானம் சென்றது. விமானம் புறப்பட்ட 13 நிமிடம் 23 நொடிகளில் காணாமல் போனது
அதன்பின் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை அன்று மாலையே விமானம் ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 189 பயணிகள் இருந்துள்ளனர். 178 பயணிகள், மூன்று குழந்தைகள், ஆறு பணியாளர்கள் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக மீட்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் சிலரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதேசமயம் இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸை மீட்புப் படை தேடி வந்தது. இந்தோனேசியா கடற்படையின் சிறந்த டைவர்ஸ்கள் எல்லோரும் இந்த பிளாக் பாக்ஸை தான் தேடிக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில்தான் இன்று காலை அந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாவா கடலில் விமானம் விழுந்த இடத்தில் இருந்து 2 சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பிளாக் பாக்ஸ் இன் நிறம் ஆரஞ்ச் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக் பாக்ஸ் கிடைத்துள்ளதால் விரைவில் விபத்திற்கான காரணம் தெரியும். ஆனால் இந்த பிளாக் பாக்ஸ் பின் டேட்டாக்களை பதிவு செய்யும் பெட்டியாக இல்லை என்று தகவல் வெளியாகவில்லை. இதை ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளனர் இந்தோனேசிய அதிகாரிகள்.
நன்றி
தமிழால் இணைவோம்.
BIG BIT NEWS
