முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்க முடிவு









முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியாக இணைந்து செயற்படுவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றுள்ள ரவூப் ஹகீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கிடையில் தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


இந்த வகையில் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் மைத்திரி - மஹிந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை என்ற முடிவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிடுகின்ற போது இவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவதில் ரிஷாட் பதியுதீன் ஆர்வமாக உள்ளதாகவும் இவ்வாறு இணைந்து செயல்படுவதால் கட்சிகள் ஏற்படுகின்ற சாதக பாதகங்களை ஆராய்ந்து சாமர்த்தியமான முறையில் செயற்பட வேண்டும் என கூறினார்.


இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதனால் கட்சி சோரம் போய் விட்டதா என சில சந்தேகப்படுவது நியாயமானதே. ஆனால் இந்த சமயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று கூறினார்.


இந்த கருத்தை ஞாயிற்றுக்கிழமை தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார்.



நன்றி
தமிழால் இணைவோம் 
BIG BIT NEWS

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url