அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சியா? அதிர்ச்சியா?
அரசாங்க உயிர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள அதிகரிப்பு இல்லை என நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் அடிப்படையில் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 1000 முதல் 1500 ரூபாவுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த சம்பள அதிகரிப்பில் ஓய்வூதிய வீதங்கள் திருத்தப்படும். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கடந்த மூன்று வருடங்களாக எந்த எந்தவித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதார நிலைமைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சம்பள அதிகரிப்பு ஒன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அரசாங்க ஊழியர்கள், இந்த சம்பள உயர்வு எங்களுக்கு போதுமானதாக இல்லை. கடந்த மூன்று வருடங்களில் வாழ்க்கைச் செலவு முதல் 7000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
குறைந்தபட்சம் சம்பளம் பெறும் தாம் மிகவும் கடினமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதாக குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் 5000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் தகவல் வெளியாகியிருந்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
