வேகப்பந்து வீச்சாளரான மாலிங்காவின் பந்துவீச்சில் உள்ள நுணுக்கங்களை அறிய கிடைத்த வாய்ப்பு இங்கிலாந்து வீரர் கருத்து தெரிவிப்பு.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவிக்கையில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான மாலிங்காவின் பந்துவீச்சில் உள்ள நுணுக்கங்களை அறிவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து வேலை செய்தது உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் மாலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்டகாலமாக இருந்து வருகின்றார். நீண்டகாலமாக சர்வதேச போட்டிகளிலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர்.
அவருக்கு எதிராக எங்களது வீரர்கள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நானும் அவருடன் மும்பை அணியில் பயிற்சி வலைகளில் கீழ் விளையாடியுள்ளேன்.
இதனால் அவரது பந்துவீச்சு பாணி எனக்கு பரிச்சயமான ஒன்றாக மாறி இருக்கின்றது. மாலிங்காவின் பந்துவீச்சு பரிச்சயமான ஒன்றாக இந்த போதிலும் அதில் இன்னும் சவால்கள் உள்ளன.
மாலிங்க போன்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களில் முறையாக எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
