யாழ். மாணவர்களை தாக்க முற்பட்ட சிங்கள இளைஞர்கள்; இனவாத கருத்துக்களால் ஏற்பட்ட பதற்ற நிலை.
அரசியல் கைதிகள் என இங்கே யாரும் இல்லை என பெரும்பான்மை இன இளைஞர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
யாழில் இருந்து அனுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக குடி இருந்த போதே இந்த தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மதுபோதையில் வந்த ஒன்றுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை இன இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை இங்கே உள்ளவர்கள் விடுதலைப் புலிகள் எனக் கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது அங்கிருந்தவர்கள் பல்கலை மாணவர்களை சமாளித்து அழைத்துச் சென்றனர். குறித்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்மைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
