வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து சுமார் கோடி ரூபா பண மோசடி செய்தவர் கைது.
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களிடம் சுமார் 5 கோடி ரூபா பண மோசடி செய்துள்ளார்.
பாணந்துரை பின்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரமே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாணந்துறை, பண்டாரகம, மத்துகம, களுத்துறை, எல்பிட்டிய, மாத்தரை மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதவிர சந்தேக நபர் வாடகைக்கு வாகனங்களை பெற்றுக் கொண்டு அவற்றைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து ஜீப் வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
