மைக்கல் எனும் நாமம் தாங்கி ப்ளோரிடாவை உலுக்கிய மைக்கல் புயல்.
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று 130 கிலோ மீட்டர் வேகத்தில் மைக்கல் புயல் தாக்கியது.
இதனால் அங்கிருந்த மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன அத்துடன் பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
ப்ளோரிடா மாகாணத்தை கடந்த இந்த புயல் தற்போதும் ஜார்ஜியா மாகாணத்தில் ராக்கி அங்கும் பலத்த சேதத்தை விளைவித்து உள்ளது.
மைக்கல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
