வெளிநாடொன்றின் சதி அம்பலம் ; அடுத்த பிரதமர் மஹிந்தவாக்க திட்டம்







முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்தும் நோக்கில் சர்வதேச நாடு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் இலங்கையிலுள்ள சிறிய அரசியல் கட்சிகளும் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவை பதவியில் அமர்த்தும் பணியில் தீவிரமாக செயற்படுமாறு பிரதான நாடொன்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

அடுத்த பிரதமருக்கு மிகவும் தகுதியான நபர் மஹிந்த ராஜபக்ச என்பதே அந்நாட்டின் கருத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் கொண்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 




சமகாலத்தில் இலங்கையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் தீவிர முயற்சியில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

எனினும் அந்த முயற்சி தோல்வி அடையும் என ஆளும் தரப்பின் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சர்வதேச நாடொன்று ஆட்சி மாற்றத்திற்கான காய் நகர்த்தல் ஈடுபட்டுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.






நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url