தமிழகத்தில் திடுக்கிடும் தகவல் காதலர்கள் பலியாகினர் காரணம் என்ன?
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சேகர் மாரியம்மாள் ஆகியோரின் இளைய மகளான சரஸ்வதி கடந்த 2015 ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அப்போது சென்னை கமான்டோ பொலிஸ் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதை அடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு அரசு நடத்திய எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்ததால் நர்சிங் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு சென்னையில் கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். கார்த்திகேயனும் கமான்டோ பயிற்சி பெற்று வந்து பதினைந்தாவது பட்டாலியனில் இருந்து வந்தார். தற்போது தமிழக பாதுகாப்புப் பிரிவில் ஓ.டி ஆக இருந்து வருகிறார்.
சென்னைக்கு 3 நாள் பயணமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருவதையொட்டி அவர் தூங்குவதற்கு குழு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார் கார்த்திகேயன்.
இந்நிலையில் அக்டோபர் 10ஆம் திகதி சரஸ்வதிக்கு பிறந்தநாள் என்பதால் முன்தினம் இரவு சென்னையிலிருந்து அன்னியூர் சென்றுள்ளார். அப்போது சரஸ்வதியின் பெற்றோர் ஹாலில் டி வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
கார்த்திகேயனும் சரஸ்வதியும் ஒரு அறையின் கதவை சாத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். சமீபகாலமாக தன்னுடன் பேசாமல் இருப்பது குறித்து சரஸ்வதியுடன் கார்த்திகேயன் கேள்வி கேட்டுள்ளார்.
அந்த நேரத்தில் சரஸ்வதியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் சரஸ்வதியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியின் நெஞ்சில் இரு முறை சுட்டு கொலை செய்தார் கார்த்திகேயன்.
அதன்பின் தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக பிரச்சினையால் சரஸ்வதி கொஞ்ச காலமாக கார்த்திகேயனை விட்டு ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் வசதிக்கு வேறு யாருடனோ நட்பு இருப்பதாக நினைத்து கார்த்திகேயன் அவரை கொலை செய்யும் முயற்சியோடு துப்பாக்கியோடு வந்துள்ளார். அதன் பின் நடந்த வாக்குவாதத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.
ஏனைய உலக செய்திகளை அறிந்து கொள்ள
நன்றி
தமிழால் இனைவோம்
BIG BIT NEWS
