திடீர் என்று நிற்கும் கார்கள்; பிரிட்டனில் சம்பவம். காரணம் இதுதான்
பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் என்ற இடத்தில் குறிப்பிட்ட கார்கள் வீதி நடுவில் திடீர் என்று நிற்க தொடங்கின. இது ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்து சென்றது.
இதற்கான காரணங்களை அறியும் போது சற்று அதிர்வகவே உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பியவர்கள். அங்கு பெற்றோலுக்கு பதிலாக டீசலும் டீசலுக்கு பதிலாக பெட்ரோலும் நிரப்ப பட்டுள்ளமையே இந்த வாகன திடீர் பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
இதற்கு குறித்த பெட்ரோல் நிலையமான Tesco யில் மாறி மாறி எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளமையால் அந்த பெட்ரோல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதுவரை அந்த பிரச்சினையை தீர்வுகாணும் முயற்சியில் பெட்ரோல் நிறுவன ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
**** VIDEO ****
***** Follow on Facebook *****
ஏனைய உலக செய்திகளை பார்வையிட.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
