மாத்தறையில் துப்பாக்கி சூடு ; காலைவாரிய துப்பாக்கி
மாத்தறையில் கக்கனதுரை - கொகாவள பகுதியில் சொகுசு பேருந்து ஒன்றின் மீதும் வியாபார நிலையம் ஒன்றின் மீதும் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
இன்று களை இந்த துப்பாக்கி சூட்டு சன்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணம் தனிப்பட்ட பிரச்சினையே என முதல்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்து வந்த இரண்டு நபர்களே இந்த துப்பாக்கி சூட்டினை நடத்தியதாக கடையின் உறிமையாளர் பொலிசிற்கு தெரிவித்தார்.
பின்னர் கடைக்கு பின்னல் நின்ற சொகுசு பஸ் மீது துப்பாக்கி சூட்டினை நடத்த முற்பட்ட வேலை குறித்த ஆயுததாரியின் துப்பாக்கி வேலை செய்ய வில்லை எனவும் சுமார் இரண்டு நிமிடம் முயற்சித்தும் பலனளிக்காததால் தப்பித்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இந்த துப்பாக்கி சூட்டில் எந்த ஒருவருக்கும் காயங்களோ உயர் சேதங்களோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூடிட்கு காரணம் பேருந்து உரிமையாளருக்கும் குறித்த சந்தேக நபருக்கும் இடையிலான தனிப்பட்ட காரணமே என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள்
ஏனைய இலங்கை செய்திகளுக்கு இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இனைவோம்
BIG BIT NEWS



