60 அடி உயரத்தில் இருந்து விழுந்த சிறுமியை காப்பாற்றிய பரபரப்பு காணொளி
சீனாவில் சுமார் 60 அடி உயரத்தில் தனது குடியிருப்பில் இருந்து சிறுமி ஒன்று தூக்க கலக்கத்தில் கீழே விழுந்துள்ளது. அந்த சிறுமியை காப்பாற்றும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி சீனாவில் சேச்சியங் மாநிலத்தில் லியுசி பகுதியில் தான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூக்க கலக்கத்தில் கதுவு என்று நினைத்து ஜன்னல் திறந்து குறித்த இரண்டு வயது சிறுமி கீழே விழுந்துள்ளது.
பாதசாரிகள் கூச்சலிட்டாலும் சிறுமி வேகமாக கீழே விழுந்ததால் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இரண்டு நபர்கள் குறித்த சிறுமியை தாங்கிப்பிடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குறித்த சிறுமிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அந்த சிறுமியை காப்பற்றியவர்களுக்கு பாரிய செதேமே ஏற்பட்டுள்ளது.
49 வயதான டிங் ஜிசை என்பவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றைய நபரான 57 வயதான யுவாங் ருஷன் என்பவருக்கு மனிக்கட்டுகையில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த சிறுமியின் பெற்றோர் இவர்களின் வைத்திய செலவினை முழுமையாக ஏற்றுள்ளனர். மேலும் இருவருக்கும் தலா 21 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கி உள்ளனர்.
**** VIDEOS ****
**** LIKE OUR FACEBOOK FAN PAGE ****
ஏனைய வெளிநாட்டு செய்திகளை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
