இங்கிலாந்து இறுதி டெஸ்ட் போட்டி : தள்ளாடும் இந்தியா
இங்கிலாந்த் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் யில் இடம்பெற்று வருகின்றது. இதில் இந்திய 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகின்றது.
முதல் நாள் நிறைவில் இங்கிலாந்த் அணி 7 விக்கெட்டிற்கு 198 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து 332 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இந்த நிலையில் முதல் இன்னிங்க்ஸ் தொடர்ந்த இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளாமல் தடுமாறியது.
தவான் 3 ஓட்டங்கள் ராகுல் 37 ஓட்டங்கள் என துரிதமான விக்கெட் இழப்புகள் இடம்பெற அணி தலைவர் கோலியின் ஆட்டம் சற்றே நிம்மதியை கொடுத்தது.
இதன் பின்னர் சிறப்பாக விளையாடி வந்த பூஜார 37 ஓட்டங்களில் ஆடமிலந்தார். பின்னர் வந்த ஹனுமா மற்றும் கோலியும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது தான் ஹோலி பெண் ஸ்டாக் யின் பந்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த கீப்பர் ரிஷாப் பண்ட 5 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இவ்வாறு சென்ற இந்திய அணி நேற்றைய நாள் முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களுடன் இருந்தது.
ஏனைய விளையாட்டு செய்திகளை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
