இரவு ஒன்பது மணிக்கு மேல் பெண்களுக்கு உணவில்லை : இந்தோனேசியாவின் புதிய கட்டுப்பாடு
உணவகங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு உணவு வழங்க வேண்டாம் என்று இந்தோனேசியாவின் ஆட்சி மாகாணத்தின் ஒரு மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் அந்த கட்டுப்பாட்டில் திருமணமாகாத அல்லது உறவினர் அல்லாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரே இருப்பிடத்தில் அமரக் கூடாது என்றும் குறிப்பிடுகின்றது.
இது சாதாரண கட்டுப்பாடாக மாத்திரமே இருப்பதாகவும் இதனை மீறுவோருக்கு தண்டனை வழங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த கட்டுப்பாட்டை ஒரு சட்டமாக இயற்ற வேண்டுமென நிர்வாகத்துக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனைய உலக செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
