பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை
பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் புதிதல்ல. அந்த வகையில் பெங்காலி சினிமாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை பயால் சக்ரபூர்த்தி செப்டம்பர் 5 யில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் போலீஸ் இக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீஸ் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் பயால் மீட்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய கணவருடன் விவாகரத்து பெற்ற பின் தனியே வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரைகளில் அதிகம் நடித்துள்ள இவர் தற்போது "KELO" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 18 வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய சினிமா செய்திகளை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
