கட்டார் நாட்டின் புதிய சட்டம்; இனி அனுமதி தேவையில்லை
எமது நாட்டைச் சேர்ந்த பலரும் தற்போது கட்டார் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் விடுமுறையிலோ அல்லது நிரந்தரமாகவோ கட்டார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அந்த நாட்டின் அனுமதியினை பெற வேண்டும்.
அதாவது Exist letter இருந்தால் மாத்திரமே அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் நீண்ட நாட்களாக இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகின்றது.
ஒருவர் அவசர தேவைகளுக்காக நாடு திரும்ப வேண்டும் என்றால் பல சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அவற்றினை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது ஒருவர் அந்த நாட்டை விட்டு வெளியேற அந்த நாட்டின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடம் எந்தவித அனுமதியையும் பெற வேண்டிய தேவை இல்லை என சட்ட இலக்கம் 13 ல் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
2022-ல் கட்டார் நாட்டில் கால்பந்தாட்ட உலகக்கோப்பை நடைபெற உள்ள காரணத்தினால் இந்த சட்டம் விரைவாக இயற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. அதிகளவு வெளிநாட்டு பணியாளர்கள் இதற்காக வேண்டி பணி அமர்த்தப்பட்டுள்ளதும் மேலும் அங்கு நீண்ட காலமாக பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன் கருதியுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஏனைய உலக செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
