நன்கு பிள்ளைகளை சுமந்த நிறைமாத கர்ப்பிணியின் துணிச்சலான முடிவு
அயர்லாந்து நாட்டில் நான்கு பிள்ளைகளை பெற்றடுத்த தாய் ஒருவர் தனது பிரசவ காலத்தில் இடம்பெற்ற உண்மை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
நீண்டகாலமா பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருந்த இவர்களுக்கு இறைவனின் பரிசாக ஒரே நேரத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தனது 17வது வாரத்தில் அந்த குழந்தைகளில் இரண்டை கைவிட்டால் மாத்திரமே மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காப்பாத்த முடியும் என Doctor கள் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அந்த செயலுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார் அந்த தாய். பின்னர் தங்களது சிகிச்சையை தொடர்ந்த அந்த பெண் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தாலும் தற்போது மற்றைய குழந்தைகளை போன்று அரோக்கியமாகவும் திறனாகவும் இருப்பதாக கூறி உள்ளார்.
2014 ஆம் ஆண்டு குழந்தைகளை பெற்றடுத்த இவர் இன்றோடு அந்த பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயதை அடைந்து விட்டது. அன்று தாய் எடுத்த துணிச்சலான முடிவு இன்று அவருக்கு பூரண சந்தோசத்தை வழங்கியுள்ளது.
ஏனைய உலக செய்திகளை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
