பழிவாங்க துடிக்கும் வரலட்சுமி
முருகதாஸ் இயக்கதி விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் நடித்து வருகின்றார் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் புதல்வியான இவர் நடிப்பில் கலக்கி வருகின்றார் அதற்கு "தரை தப்பட்டை" என்ற படம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும் பல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் கமலகாசன் மற்றும் ஸ்ரீ பிரியா நடித்த நீயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வரலக்க்ஷ்மி ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இந்த படத்தின் மூலம் இவர் பழிவாங்க துடிக்கும் ஒரு நாகப்பாம்பு வேடத்தில் நடிக்க உள்ளார். நடனம் ஆடுவதில் சிறந்த இவர் அந்த படத்திற்கு பொருத்தமானவர் என இந்த படத்தின் இயக்குனர் L. சுரேஷ் தெரிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் இச்சாதாரி பாம்பாக நடிக்க உள்ளார் வரலட்சுமி. இந்த படத்தில் மேலும் ராய் லக்ஷ்மி மற்றும் கேத்திரின் நடிக்கின்றனர். அண்மையில் இந்த படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகின.
Poster :
ஏனைய சினிமா தகவல்களை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS



