பிரதமராக பதவி ஏற்கும் மஹிந்த ராஜபக்க்ஷ : புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை
கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்ற வேலையில் அது நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
அதாவது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் என்ற அந்த புகைப்படமே இணையத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தப் புகைப்படத்தினை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரதான நோக்கமே நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்ச்சி அடைய செய்து அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிப்பதே ஆகும்.
இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றியளிக்கவில்லை என்பதனால் இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
ஏனைய இலங்கை செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழாலு இணைவோம்
BIG BIT NEWS

