ராதிகா சரத்குமார் நடிக்கும் சந்திரகுமாரி
ராதிகா சரத்குமார் நடிக்கும் தொலைக்காட்சித் தொடர் சந்திரகுமாரின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த சந்திரகுமாரி தொலைக்காட்சி
தொடர் அதிகளவான பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வாணி ராணி தொடரில் ராதிகா சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் இந்த தொலைக்காட்சி தொடர் முடிவடையும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அதிக பொருட்செலவில் தமிழில் தொலைக்காட்சி தொடர் எடுப்பது இதுவே முதல் முறை ஆகும் இதற்குக் காரணம் இந்தியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள் தமிழில் மொழி மாற்றம் பெற்று வழங்கப்படுவதாகும்.
இதனால் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தி தொலைக்காட்சி தொடருக்கு போட்டியாக பிரம்மாண்டமாக இந்த ராதிகா சரத்குமாரின் "சந்திரகுமாரி" தொலைக்காட்சித் தொடர் உருவாக்கப்பட்டு வருகின்றது.
குறைந்த செலவிலேயே தொலைக்காட்சி தொடர்களை எடுத்து வந்த ராடன் மீடியா தற்போது அதிக செலவில் இந்த சந்திரகுமாரி தொலைக்காட்சி தொடரை உருவாக்கி வருகின்றது.
இந்த தொடர் கதைக்கான பிரதான கதாபாத்திரமாக ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றார் நந்தகுமாரி தொடர்பாக வெளியான புகைப்படங்கள் அனைத்தும் பாகுபலி சிவகாமி கதாபாத்திரத்தினை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
***** PHOTOS *****
ஏனைய சினிமா செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS


