அஞ்சலோ மெத்தியூஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கம் ; காரணம் வெளியானது.
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நீக்குவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆசிய கோப்பையில் இலங்கை அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஹத்துருசிங்க குறிப்பிடுகின்ற போது அஞ்சலோ மெத்தியூஸ் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓட்டங்களை தவிக்கின்ற போது மிக மந்தமான நிலையில் செயற்படுவதாகவும் துடுப்பாட்ட வீரர்களை அனுப்பி விடுவதாகவும் குறிப்பிட்டார்.
இதுவரை 64 ரன் அவுட்களில் பங்கெடுத்து 49 முறை எதிர் துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது ஒரு உலக சாதனை என்று ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் முதலில் பீல்ட் செய்து விட்டு பிறகு பெட்டிங் செய்வதற்கான உடற்தகுதி மெத்தியுஸ்ஸிடம் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற விடயங்கள் மெத்தியுஸ்ஸிடம் இருப்பதால் அணி வீரர்களுக்கு சுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர் வருகின்ற காலத்தில் இந்த குறைபாடுகளை மெத்தியூஸ் நிவர்த்தி செய்து நாட்டுக்கு பணிபுரிவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஏனைய விளையாட்டுச் செய்திகள்
நன்றி
தமிழால் இணைவோம்.
BIG BIT NEWS
