பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபிற்க்கு பரோல் : காரணம் என்ன தெரியுமா ?
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை பெற்று வரும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவருடைய மனைவி இறந்தததை தொடர்ந்து அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்த் நாட்டில் இலஞ்சப்பணத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த குற்றத்திற்காக நவாஸ் ஷெரிப் இற்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் அவரது மகளுக்கு 7 வருடமும் மருமகனுக்கும் 1 வருடம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நவாஸ் ஷேரிபின் மனைவி நேற்று காலமானார். இதனால் மனைவியின் இறுதி கிரிகைகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தார்.
இதனை ஏற்றுகொண்ட நீதிமன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மருமகனுக்கு 12 மணிநேரம் பரோலில் செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
ஏனைய வெளிநாட்டு செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
