அரசாங்கத்தை என்னிடம் ஒப்படையுங்கள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ
அரசாங்கம் உடனடியாக இந்த நாட்டில் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்க்ஷ கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து உரையாற்றுகையில் அரசாங்கத்தில் பொருத்தமான தலைமைத்துவம் இன்மையே இந்த பொருளாதார பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினார்.
மேலும் அவர் உரையாற்றுகின்ற போது தாங்கள் ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் ஒரு டொலரின் பெருமதி 131.40 ரூபாவாக இருந்ததாகவும் ஆனால் தற்போது 170 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் இலங்கை நாணயத்தின் பெறுமதி மதிப்பிழந்து காணப்படுகின்றமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்குள் முதலிடுவதற்கு அச்சப்படுகின்றனர். இது வெளிநாட்டு முதலீடுகளை வீழ்ச்சி அடையச் செய்கின்றது.
மேலும் தேர்தல் ஒன்று இடம் பெற வேண்டும் எனவும், அதில் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம். எங்களால் வெற்றி பெற முடியும். ஏற்கனவே உள்ளூராட்சித் தேர்தலில் எமது பலத்தை நிரூபித்துள்ளோம் என தெரிவித்தார்.
ஏனைய இலங்கை செய்திகளை அறிந்து கொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
