மட்டக்களப்பு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சிகர தகவல்கள்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் போலீஸ் காவலரண்களில் வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகி உள்ளன.
வவுணதீவு வலையிறவு பலத்திற்கு அண்மையில் இருந்த இந்த காவலரணில் மொத்தம் 3 போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த காவலரணில் ஒரு சிங்கள போலீஸ் உத்தியோகத்தரும் இரண்டு தமிழ் போலீஸ் உத்தியோகத்தரும் தான் கடமையில் இருப்பார்கள்.
அதில் கரைதீவை சேர்ந்த போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடல் நல குறைவால் காவலரண் பதிவேட்டில் ஒப்பமிட்டு வீடு திரும்பி செல்வது வழமை.
அவ்வாறு அந்த ந்போளிசே உத்தியோகத்தர் கையொப்பமிட்டு சென்ற பின்னர்இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் சுமார் இரவு 1.10 மணிக்கு கையொப்பமிட்டு விட்டு சென்றுள்ளார். இவர் சென்ற பின்னரே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவலரணில் இருந்து சுமார் 500m தொலைவில் உள்ள கடை ஒன்றில் உள்ள CCTV யில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சென்றுள்ள கட்சி பதிவாகி உள்ளது. இருப்பினும் இலக்க தகடு தெளிவில்லாமல் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் போலீஸ் உதியோதர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிங்கள போலீஸ் உத்தியோகத்தர் கதியால் குத்தியும் கழுத்து வெட்டப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார். கதி குத்து அவரது இதயம் வரை பாய்ந்துள்ளது.
தமிழ் போலீஸ் உத்தியோகத்தர் கை பின்னல் கட்டப்பட்டு தலை நிலத்தில் பட வைக்கப்பட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தமிழ் உத்தியோகத்தரின் கைவிரல் முரிவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனால் இவர்கள் வந்தவர்களுடன் சண்டையில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிய வருகின்றது.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் போலீசாரிடம் இருந்த துப்பாக்கிகளையும் எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவீரர் தினத்தினை ஒழுங்கமைத்த குழு ஒன்றினை விசாரனைக்கு உட்படுத்தி உள்ளது போலீஸ்.
PHOTOS :
VIDEO :
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS





